‘பாத்ரூம் கட்ட பக்கத்துவீட்டுக்காரர் எதிர்ப்பு’.. கலெக்டர் அலுவலகத்தில் 3 குழந்தைகளுடன் விபரீத முடிவெடுத்த தாய்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 19, 2019 11:02 AM

கழிப்பறை கட்டுவதற்கு பக்கத்து வீட்டுக்காரர் எதிர்ப்பு தெரிவித்தால் 3 குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dindigul woman and Children suicide attempt in collector office

திண்டுக்கல் மாவட்டம் புளிய ராஜக்காபட்டி கிராமத்தை சேர்ந்தவர் தனம். இவர் தனது வீட்டின் அருகே புதிதாக ஒரு கழிப்பறை கட்ட முயன்றுள்ளார். ஆனால் அதற்கு தனத்தின் பக்கத்து வீட்டுக்காரர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் இதுதொடர்பாக தனம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். ஆனால் போலீசார் புகாரை வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் நேற்று தனது 3 குழந்தைகளை அழைத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தனம் சென்றுள்ளார். அங்கு திடீரென குழந்தைகள் மற்றும் தன்மீது மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த காவலர்கள், உடனே அவர்களை தடுத்து நிறுத்தி அங்கிருந்து அழைத்து சென்றுள்ளனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : #SUICIDEATTEMPT #DINDIGUL #WOMAN