‘வளர்ப்பு நாயுடன் வாக்கிங்’ சென்ற கர்ப்பிணி மனைவியின் ஃபோன் காலால்.. ‘பதறியடித்து ஓடிய’ கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..
முகப்பு > செய்திகள் > உலகம்By Saranya | Nov 21, 2019 01:49 PM
பிரான்ஸில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் வேட்டை நாய்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸைச் சேர்ந்த 29 வயதான எலிசா என்ற கர்ப்பிணிப் பெண் ரெட்ஸ் வனப்பகுதியில் தனது வளர்ப்பு நாயுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது திடீரென தனது கணவருக்கு ஃபோன் செய்த எலிசா தன்னை வேட்டை நாய்கள் கூட்டம் தாக்க வருவதாகக் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து உடனடியாக அவருடைய கணவர் எலிசா இருக்கும் இடத்திற்கு விரைந்துள்ளார். ஆனால் அங்கு சென்று பார்த்தபோது எலிசா ரத்த வெள்ளத்தில் ஏற்கெனவே உயிரிழந்து கிடந்துள்ளார்.
இதைப் பார்த்து உறைந்துபோன அவருடைய கணவர் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் எலிசாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பரிசோதனை முடிவில் 30க்கும் மேற்பட்ட நாய்கள் எலிசாவுடைய கைகள், கால்கள், உடல் மற்றும் தலையில் கடித்ததால் அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.