'கண், மூக்கு, வாயெல்லாம் இருக்கு?'.. 'அப்படியே மனித முக சாயலுடன் நீந்தும் மீன்!'.. தெறி ஹிட் அடித்த வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Nov 10, 2019 06:05 PM

உயிரினங்களை மனித முகங்களுடன் சித்தரித்து உருவாக்கி திரைப்படங்களை எடுப்பதில் ஹாலிவுட் காரர்கள் வல்லவர்கள் எனச் சொல்லலாம்.

a fish with a human face video goes viral on social media

அப்படி உருவாக்கிய பல திரைப்படங்களுக்குள் இருக்கும் கதாபாத்திரங்கள் உண்மையில் இல்லை. ஆனால் அப்படி உருவாகாத கற்பனை கேரக்டர்கள் உண்மையில் வந்துவிட்டால் எவ்வளவு ஆச்சரியம்? அத்தகைய ஆச்சரியத்தை சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்செயலாக வீடியோ எடுக்கும்போது படம் பிடித்துள்ளார்.

ஆம், மனித முகத்தில் இருக்கும் கண், மூக்கு, வாய் உள்ளிட்ட சாயல்களுடன் கூடிய பெரிய மீன் ஒன்று வேகமாக நீந்தி வரும் அந்த வீடியோதான் இணையத்தில் ஹிட் அடித்து வருகிறது. சீனாவின் மியோவா கிராமத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் இருக்கும் மீன் வழக்கமான மீனல்ல என்பதால், வீடியோவை பார்த்தவர்கள் பரவசமாக பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் இணையவாசிகள்,  இந்த மீனை சீமேன்’ என்கிற கற்பனை கார்ட்டூன் கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர். 

Tags : #VIDEOVIRAL #FISH