'காதலித்து திருமணம் செய்த இளம்பெண்'... '3 ஆண்டுகளில் நடந்த சோகம்'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 04, 2019 07:39 PM

காதலித்து திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The young woman committed suicide, the family suspected

சிதம்பரம் மந்தகரை காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வினோத். இவர் அதேப் பகுதியில் உள்ள, ஒரு பெட்ரோல் பங்க்கில் ஊழியராக வேலைப் பார்த்து வருகிறார். இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர், அபிராமி (22) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, அபிராமி  தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டார்.

இதனால் அபிராமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து கதறித் துடித்தனர். பெற்றோர் கொடுத்த தகவலின்பேரில், அபிராமியின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், வரதட்சணை காரணமாக, அபிராமியிடம் அவரது மாமியார், அடிக்கடி பிரச்சனை செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு இருந்துவந்ததாகத் தெரிகிறது.

இதனால் அபிராமி மனமுடைந்து இருந்து வந்துள்ளார். இந்நிலையில், அபிராமி உடல் தூக்கில் தொங்கியவாறு மீட்கப்பட்டுள்ளதால், அவரின் இறப்பில் மர்மம் இருப்பதாக, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றஞாட்டியுள்ளனர். இதன்பேரில் சந்தேக மரணம் என போலீசார் வழக்கு பதிவுசெய்துள்ள நிலையில், ஆர்.டி.ஓ விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : #CHIDAMBARAM #SUICIDE #WOMAN