‘சீனப்பெண்ணை திருமணம் செய்த சேலம் டாக்டர்’.. காதல் மலர்ந்தது எப்படி தெரியுமா..?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 04, 2019 01:54 PM

தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சீனப்பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

Salem doctor married to Chinese woman in Tamil Nadu

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி அருகே உள்ள மணக்காடு அன்பு நகரை சேர்ந்தவர் பரசுராமன். இவரது மகன் அருண்பிரசாத் (34). இவர் ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் தனியார் நிறுவனத்தில் தலைமை நிர்வாகியாக பணியாற்றி வரும் சீனப்பெண் கிறிஸ்டல் ஜியாங் என்ற பெண்ணை அருண்பிரசாத் காதலித்துள்ளார். முதலில் அருண்பிரசாத்தின் காதலை மறுத்த கிறிஸ்டல் பின்னர் அவரை காதலிக்க தொடங்கியுள்ளார். கடந்த 5 வருடங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் திருமணம் செய்துகொள்ள முடிவெடித்து இருவரும் அவர்களது பெற்றோர்களிடம் சம்மதம் பெற்றுள்ளனர். இதனை அடுத்து நேற்று காலை சேலம் ஜான்சன்பேட்டையில் உள்ள தேவாலத்தில் இருவருக்கும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் அருண்பிரசாத்தின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கிறிஸ்டல் ஜியாங்கின் பெற்றோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் சீனாவில் இருவருக்கும் திருமண வரவேற்பு நடக்க உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tags : #SALEM #DOCTOR #MARRIED #CHINESE #WOMAN