‘அபசகுண நம்பிக்கையால் நடந்த பயங்கரம்’.. ‘கணவர் வருவதற்குள்’.. ‘இளம்பெண் செய்த அதிர்ச்சிக் காரியம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 04, 2019 11:44 AM

தேனியில் அபசகுணமாக நடந்துகொண்டதாக பக்கத்து வீட்டுக்காரரால் தாக்கப்பட்ட இளம்பெண் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Theni Woman Kills Self After Fight With Superstitious Neighbour

தேனி ஓடைத்தெருவைச் சேர்ந்த கிருஷ்ணவேணி என்ற பெண்ணிற்கும், அவருடைய பக்கத்து வீட்டுக்காரரான சந்திரன் என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சந்திரன் வீட்டைவிட்டுக் கிளம்பும்போது கிருஷ்ணவேணி தனது வீட்டு வாசலில் நின்று தலை சீவிக்கொண்டிருந்துள்ளார். அதை அபசகுணம் என நினைத்த சந்திரன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதத்தின்போது ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சந்திரன் கிருஷ்ணவேணியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தன் கணவர் சதீஷ்குமாருக்கு ஃபோன் செய்த கிருஷ்ணவேணி அழுதுகொண்டே நடந்ததைக் கூறியுள்ளார். அதற்கு அவர் தான் வீட்டிற்கு வருவதாகவும், வந்த பின் இதுபற்றி பேசிக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார். ஆனால் கணவர் வருவதற்கே முன்பே அவமானம் தாங்காமல் கிருஷ்ணவேணி வீட்டுக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் கிருஷ்ணவேணியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தற்கொலைக்கு தூண்டியதாக சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் அவரை சிறையில் அடைத்துள்ளனர். காதல் திருமணம் செய்துகொண்ட கிருஷ்ணவேணிக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், குழந்தையை நினைத்தாவது அவர் இந்த முடிவை எடுக்காமல் இருந்திருக்கலாம் என உறவினர்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.

மன அழத்தம், மன உளைச்சல் உள்ளவர்கள் Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours), State suicide prevention helpline – 104 (24 hours), iCall Pychosocial helpline – 022-25521111 ( Mon – Sat, 8am – 10pm) போன்ற இலவச ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொண்டு பேசினால் அதிலிருந்து வெளிவர ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

Tags : #THENI #WOMAN #SUICIDE #HUSBAND #SUPERSTITIOUS #NEIGHBOUR #BABY #HAIR #COMB