'காரில் கடத்திச்சென்று பலாத்காரம்'.. 'வீட்டு வாசலில் மீண்டும் இறக்கிவிடப்பட்ட பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடுமை'.. பெற்றோர்களை நடுங்கவைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Nov 04, 2019 07:15 PM

கேரளாவில் பள்ளி மாணவியைக் கடத்தி பலாத்காரம் செய்துவிட்டு மறுநாள் வீட்டுக்கு அனுப்பிவைத்த கும்பலால் திருவனந்தபுரத்தில் அதிர்ச்சி தொற்றியுள்ளது.

Kerala: 4 friends arrested for abusing minor girl student

கேரளாவில் கடினம்குளம் பகுதியில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்றுகொண்டிருந்துள்ள வேளையில், அவ்வழியே காரில் வந்த 4 பேர் மாணவியை காரில் கடத்திச் சென்றனர். இதனிடையே பள்ளி சென்ற மாணவி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், போலீஸாரிடத்தில் புகார் அளித்தனர்.

அடுத்த நாள் காலை வீட்டுக்கு அனுப்பப்பட்ட மாணவி, அழுதபடி பெற்றோரிடம் வந்து சேர்ந்திருக்கிறார். தன்னை 4 பேர் கடத்திச் சென்று ஹோட்டல் ஒன்றில் வைத்து பலாத்காரம் செய்துவிட்டு, காலையில் வீட்டின் அருகே வந்து டிராப் செய்துவிட்டதாகவும் கூறி கதறியுள்ளார்.

இதனையடுத்து விசாரணை செய்த போலீஸார் சோஜன் ( 23), அபிலாஷ் (25), ரோமி (23), நிரஞ்சன் (25) ஆகியோர்தான் இந்த குற்றத்தைச் செய்தார்கள் என்பதை கண்டுபிடித்த கையோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கேரள பெற்றோர்களை அச்சமடைய வைத்துள்ளது.

Tags : #KERALA