'செல்ஃபோனை பார்த்துகிட்டே’... ‘தண்டவாளத்தில் தவறி விழுந்த பெண்’... ‘அதிர்ச்சியடைந்த பயணிகள்’... வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Nov 01, 2019 06:11 PM

செல்ஃபோனை பார்த்துக்கொண்டே, பிளாட்ஃபார்ம் நுனி வந்ததைக் கூட அறியாமல், பெண் ஒருவர் தண்டவாளத்தில் விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Woman on phone slips and falling in front of metro train

ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் உள்ள எஸ்ட்ரெச்சோ மெட்ரோ ரயில்நிலையத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. பயணிகள் பலர், மெட்ரோ ரயிலுக்காக காத்திருந்தநிலையில், பெண் ஒருவர் அங்கிருந்த பிளாட்ஃபார்ம் இருக்கையில் அமர்ந்து, செல்ஃபோனை மிகவும் பரபரப்பாக ஆராய்ந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு ரயில் வந்துநிற்க, எதிர்திசையில் மற்றொரு ரயில் வரும் சத்தம் கேட்டது.

இதனை கேட்டுக்கொண்டிருந்த அந்தப்பெண், செல்ஃபோன் பயன்படுத்திக்கொண்டே ரயிலில் ஏறுவதற்காக, பிளாட்ஃபார்மிற்கு வந்து முன்னாடி நிற்க எழுந்து வந்தார். அப்போது பிளாட்ஃபார்மின் நுனி முடிந்ததை கூட கவனிக்காமல், செல்ஃபோனை பயன்படுத்திக்கொண்டே, ரயில்வே தண்டவாளத்தில் தவறி கீழே விழுந்தார். இதனால் காத்துக்கொண்டிருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அந்த தண்டவாளத்தில் வந்த ரயில் அப்படியே நிறுத்தப்பட்டது.

பின்னர் அந்தப் பெண்ணை தூக்கிய ரயில்நிலைய அதிகாரிகள் உடனடியாக முதலுதவி அளித்தனர். இந்த சம்பவத்தில் அவருக்கு பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து, தற்போது மெட்ரோநிலைய அதிகாரிகள், ரயில்நிலையத்தில் செல்ஃபோன் பயன்படுத்துவதில் கவனம் தேவை என்று அறுவுறுத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

Tags : #METRO #TRAIN #SPAIN #MADRID #WOMAN #FALL