'நீல விழிகளுக்கு' ஆசைப்பட்டு டாட்டூ.. 'இளம் பெண்ணுக்கு' நேர்ந்த சோக சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Nov 04, 2019 04:20 PM

கண்களில் டாட்டூ போட்டுக்கொள்ள நினைத்த பெண் பார்வைக் குறைபாட்டுடன் அவதிப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

young girl turns blind after tried to get blue eyes using tattoo

ஆஸ்திரேலியாவில் அம்பர் லூக் என்கிற 24 வயது இளம் பெண் நவீன டாட்டூக்களை உடல் முழுவதும் குத்திக்கொள்ள நினைத்து கடந்த 10 வருடங்களாக உடல் முழுவதும் இடைவெளியின்றி டாட்டுக்களை குத்திக்கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் கண்களிலும் பச்சை குத்திக்கொள்ள எண்ணியுள்ளார்.

கண்கள் நீலநிறத்தில் வசீகரிக்கும்படியாக இருக்க வேண்டும் என நினைத்து 14 ஆயிரம் பவுண்டுகள் செலவு செய்துள்ள இந்த பெண் 3 வாரங்கள் இதற்காக முயற்சித்துள்ளார். ஒரு கட்டத்தில் கண்கள் நீலநிறமானதோடு, கண் பார்வை முற்றிலுமாக மழுங்கி அப்பெண் பார்வைக் குறைபாட்டுடன் தற்போது அவதிப்படுகிறார்.

இதனால் அப்பெண்ணின் பெற்றோர்கள் மிகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags : #WOMAN #TATTOO