'ஏன் ரெண்டு பேரும் பயப்படுறீங்க? என்ன ஆச்சு...?' 'ஊசியைக் காட்டி மிரட்டி...' 'மருந்து வாங்க வந்த குழந்தைகளிடம்...' பதற வைக்கும் சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரையில் மருந்து வாங்க வந்த குழந்தைகளிடம் ஊசியைக் காட்டி மிரட்டி பிற வாடிக்கையாளர்கள் கிளம்பி சென்ற பிறகு, தன்னுடைய ஆடையை களைந்து விட்டு பாலியல் தொல்லை தந்த மெடிக்கல் உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

மதுரை செல்லூர் போஸ் தெருவை சேர்ந்தவர் சங்கர் கணேஷ். இவர் அந்தப் பகுதியில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். நேற்று மாலை மெடிக்கல் ஷாப்பிற்கு மருந்து வாங்க அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது மற்றும் 10 வயது மதிக்கத்தக்க சகோதரிகள் இருவர், தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் மருந்து வாங்க வந்துள்ளனர்.
அப்போது அங்கிருந்த சங்கர் கணேஷ் அவர்களுக்கு மருந்து வழங்காமல், அவர்களுக்கு பின்னால் வந்த பிற வாடிக்கையாளர்களுக்கு மருந்து கொடுத்து அவர்களை அங்கிருந்து அனுப்புவதில் மும்முரம் காட்டியுள்ளார். அனைவரும் அனுப்பிய பின் சிறுமி இருவரையும் மெடிக்கல் ஷாப்பிற்கு உள்ளே அழைத்த சங்கர் கணேஷ், தன் ஆடைகளை களைந்து குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
குழந்தைகள் இருவரும் பயத்தில் சத்தம் போடவே, அங்கிருந்த ஊசி ஒன்றை எடுத்து அவர்களை மிரட்டியுள்ளார். இங்கு நடந்த விஷயத்தை வெளியே யாரிடமும் சொல்ல கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில், வீடு திரும்பிய குழந்தைகள் இருவரும் பயப்படுவதை அறிந்த அவரது தாயார் அவர்களிடம் விசாரித்தபோது நடந்தவற்றை கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து செல்லூர் காவல் நிலையத்தில் குழந்தைகளின் பெற்றோர் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் செல்லூர் போலீசார் விசாரணை நடத்தி சங்கர் கணேஷை உடனே கைது செய்தனர். சிறுமிகள் விவகாரம் என்பதால் தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் ஜெய்கணேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
