‘மாட்டுப்பண்ணையில் ஏற்பட்ட திடீர் மின்கசிவு’.. ‘கன்றுக்குட்டிகள் உட்பட 30 பசு மாடுகள் பலி’.. உசிலம்பட்டி அருகே சோகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Feb 28, 2020 09:15 AM

உசிலம்பட்டி அருகே மாட்டுப்பண்ணையில் ஏற்பட்ட திடீர் மின்கசிவால் உண்டான தீயில் கருகி 30 பசு மாடுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

30 cows, 2 calves killed in fire accident near Usilampatti

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செட்டியபட்டி பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவர் 53 மாடுகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். பசு மாடுகளை வைத்து பால் கறவை தொழிலும் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை சுமார் 10 மணியளவில் பண்ணையில் திடீரென மின்கசிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் மாட்டுப்பண்ணையில் சட்டென தீ எரிய ஆரம்பித்துள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி 30 மாடுகள், 2 கன்றுக்குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தன. படுகாயமடைந்த 10 மாடுகள் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்தில் 30 பசு மாடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags : #MADURAI #FIREACCIDENT #KILLED #USILAMPATTI #COWS