‘பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்‘... 'ப்ளஸ் டூ படித்த மாணவிக்கு நேர்ந்த கொடூரம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jul 07, 2019 03:31 PM

சேலம் அருகே அரசுப் பள்ளி ஆய்வுக்கூடத்தில் 12-ம் வகுப்பு மாணவி, உதவி தலைமை ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

sexual abuse for plus two student by chemistry teacher arrested

காக்காபாளையம் பகுதியில் வேம்படித்தாளம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.  இங்கு உதவித் தலைமை ஆசிரியராகவும், வேதியியல் ஆசிரியராகவும் ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் பணியாற்றி வந்தார். அதேப் பள்ளியில் கடந்த ஆண்டு, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் பிளஸ்–2 படித்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஆய்வுக்கூடத்தில் வைத்து, ஆசிரியர் பாலாஜி தன்னை பாலியல் தொல்லை அளித்ததாகவும், தொடர்ந்து மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததாகவும் பெற்றோரிடம் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, கொண்டலாம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அரசுப் பள்ளி ஆய்வகத்தில் நடந்த இந்த சம்பவத்தால் மாணவி தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருப்பதாக, உயர் காவல் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உயர் காவல் அதிகாரிகளின் உத்தரவின் பேரில், கொண்டலாம்பட்டி காவல்துறையினர் பள்ளிக்கூடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் உதவி தலைமை ஆசிரியர் பாலாஜி தலைமறைவானது தெரியவந்தது.

மாணவியை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பிய காவல்துறையினர், ஆசிரியர் பாலாஜி மீது பாலியல் வன்கொடுமை, போக்சோ உள்ளிட்ட 3 கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து வலைவீசித் தேடி வந்தனர்.  தற்போது பள்ளியின் உதவி ஆசிரியர் போலீசாரிடம் சிக்கியுள்ளார். இதற்கிடையில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் பாலாஜி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Tags : #SEXUALABUSE #SALEM #TEACHER #STUDENT