'நான் மயக்கத்துல இருந்தேன்'...'சென்னையின் பிரபல மருத்துவமனையில்'...'பெண்ணிற்கு' நேர்ந்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jun 14, 2019 10:41 AM

சென்னையின் பிரபல மருத்துவமனையில்,மயக்கத்தில் இருந்த பெண் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai hospital employee arrested for sexual harassment

சென்னை பெருங்குடியில் பிரபல தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர்,மூட்டு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இடது காலில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தார்கள். இதையடுத்து அந்த பெண் அறுவை சிகிச்சை அரங்கிற்கு கொண்டு செல்ல பட்டார். 

அந்த பெண்ணிற்கு மயக்கமருந்து கொடுக்கப்பட்டது.அதன் பிறகு அந்த பெண் அறுவை சிகிச்சை அரங்கில் தனியாக இருந்துள்ளார்.இந்நிலையில் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு அந்த பெண் கூறியதை கேட்டு அவரது குடும்பத்தினர் அதிர்ந்து போனார்கள்.அறுவை சிகிச்சை அரங்கில் இருந்த போது அங்கிருந்த ஊழியர் ஒருவர் அந்த பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.பிரபல மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவம் அந்த பெண்ணின் குடும்பத்தினரை கடும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் துரைப்பாக்கம் மருத்துவமனையில் புகார் அளித்தார்.இதையடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், மருத்துவமனையில் மயக்க மருந்து பிரிவில் பணியாற்றும் வேலூரைச் சேர்ந்த டில்லிபாபுவை கைது செய்தனர்.இதனிடையே மருத்துவமனையில் தனக்கு என்ன நடந்து என்பது குறித்து காவல்துறையிடம் அந்த பெண் விரிவாக கூறியுள்ளார்.அதில் 'எனக்கு மயக்க மருந்து கொடுத்த போது நானும் அந்த ஊழியரும் தான் இருந்தோம். அப்போது தான் அந்த நபர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.ஆனால் என்னால் அதனை தடுக்க முடியவில்லை' என காவல்துறையினரிடம் கதறி அழுதுள்ளார்.

இதற்கிடையே அந்த பெண்ணிற்கு நடந்த கொடூரம் குறித்து முதலில் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது.அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகம்,அறுவை சிகிச்சை அரங்கில் அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என முதலில் கூறியுள்ளது.பின்பு அந்த பெண் உறுதியாக இருந்ததால்,மருத்துவமனை நிர்வாகம் நடத்திய விசாரணையில் டில்லிபாபு சிக்கிக் கொண்டார்.இதையடுத்து அவரை பணியை விட்டு நீக்கும் நடவடிக்கையில் மருத்துவமனை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் டில்லிபாபு இதற்கு முன்பு வேறு யாரிடமாவது இவ்வாறு நடந்து கொண்டுள்ளாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சென்னையின் பிரபல மருத்துவமனையில்,பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ள சம்பவம்,கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SEXUALABUSE #POLICE #HOSPITAL #APOLLOHOSPITAL #CHENNAI #LAB TECHNICIAN