‘ஃபேஸ்புக் கௌரவப்படுத்திய இந்திய மாணவர்..’ 19 வயதில் செய்த காரியம்..?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Jun 05, 2019 11:04 AM

வாட்ஸ்அப் செயலியிலிருந்த குறையைக் கண்டுபிடித்ததற்காக 19 வயது கேரள மாணவரைக் கௌரவப்படுத்தியுள்ளது ஃபேஸ்புக்.

facebook rewards 19 year old kerala student for reporting Whatsapp bug

வாட்ஸ்அப் செயலி உள்ளிட்ட தங்களது செயலிகளில் உள்ள பக் எனும் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு ஃபேஸ்புக் ஊக்கத்தொகை அளித்து பெருமைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியில்  இருந்த ஒரு குறைபாட்டை கேரளாவைச் சேர்ந்த கே.எஸ்.அனந்தகிருஷ்ணா என்ற பொறியியல் மாணவர் கண்டுபிடித்துள்ளார். வாட்ஸ்அப் செயலியை உபயோகிக்கும் ஒருவரது கணக்கில் பதியப்பட்டிருக்கும் ஃபைல்களை மற்றவர்கள் முழுவதுமாக அழிக்க வழிசெய்யும் வகையில் அந்தக் குறைபாடு இருந்துள்ளது.

இதுபற்றி ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு தகவல் கொடுத்த அவர் அந்தக் குறைபாட்டை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த 2 மாதங்களாக ஆய்வு செய்து அந்தக் குறைபாட்டை நீக்கிய ஃபேஸ்புக், அதைக் கண்டுபிடித்த அனந்தகிருஷ்ணாவுக்கு 500 அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 34,000) ஊக்கத்தொகையாக அளித்ததுடன் ஃபேஸ்புக்கின் வால் ஆஃப் ஃபேம் பட்டியலிலும் அவர் பெயரை இணைத்துள்ளது. அந்நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளவர்கள் பட்டியலில் அனந்தகிருஷ்ணாவின் பெயர் 80வது இடத்தில் இடம்பெற்றுள்ளது.

கேரளா பத்தினம்திட்டாவில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வரும் அனந்தகிருஷ்ணா அந்த மாநில போலீஸின் ஆய்வுப் பிரிவான கேரளா போலீஸ் சைபர்ட்ரோம் பிரிவில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : #FACEBOOK #STUDENT