‘ப்ரண்ட்னு நம்பி வந்ததுக்கா இந்த நிலைமை’.. ரயில் தண்டவாளத்தில் தரதரவென இழுத்து.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jun 21, 2019 04:49 PM

விழுப்புரம் அருகே தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Gang Sexual abuse of a young woman in Villupuram

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வரும் பெண் ஒருவர், நேற்று முன்தினம் வேலை முடிந்து வீடு திரும்போது வழியில், அப்பெண்ணின் ஆண் நண்பரான அருள்ஜோதி என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளார். இதனை அடுத்து அப்பெண்ணும் அவருடன் பைக்கில் சென்றுள்ளார்.

அப்போது திடீரென ரயில்வே நிலையத்தின் அருகே அருள்ஜோதி பைக்கை நிறுத்தியுள்ளனர். பின்னர் அங்கே வந்த அருள்ஜோதியின் நண்பர்கள் 4 பேரும் அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் ரயில்வே தண்டவாளத்தில் அப்பெண்ணை இழுத்து சென்றுள்ளனர். இதனால் படுகாயமடைந்த அப்பெண் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பராக பழகி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SEXUALABUSE #WOMEN #VILUPPURAM