‘அவளை நீ காதலிக்கக் கூடாது..’ கல்லூரிமுன் நடந்த பதைபதைக்க வைக்கும் பயங்கரம்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jun 27, 2019 02:36 PM

சென்னையில் காதல் பிரச்சனை காரணமாக கல்லூரிமுன்பே ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

College student kills friend over love issue in chennai

துரைப்பாக்கத்தில் உள்ள அமிர்தா கல்லூரியில் ஆந்திராவைச் சேர்ந்த கெண்டமெலா ஷெவன்குமார், சண்முகம் ஆகியோர் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளனர். ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவரும் ஆரம்பத்திலேயே நண்பர்களாகியுள்ளனர். இந்நிலையில் ஷெவன்குமார் சண்முகத்தின் சகோதரி உறவுமுறை கொண்ட பெண் ஒருவரைக் காதலிப்பதாக அவருக்குத் தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து தனது சகோதரியிடம் பேச வேண்டாம் என பலமுறை சண்முகம் ஷெவன்குமாரைக் கண்டித்துள்ளார். ஆனால் ஷெவன்குமார் அதைக் கண்டுகொள்ளாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சண்முகம் கல்லூரி வாசலில் அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த சண்முகம், ஷெவன்குமாரை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன்பே உயிரிழந்துள்ளார். கல்லூரி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விரைந்து வந்த துரைப்பாக்கம் போலீஸார் சண்முகத்தைக் கைது செய்துள்ளனர். காதல் விவகாரத்தில் உயிருக்கு உயிராகப் பழகிவந்த நண்பரையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #BRUTALMURDER #STUDENT #LOVE