'அண்ணன் கூட விளையாடலாம்னு தானே'...'என் பொண்ண கூட்டிட்டு போன'... சிறுவனின் வெறிச் செயல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Jun 22, 2019 12:09 PM

4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

13-year-old boy rapes nursery girl in Punjab village

பஞ்சாபின் சங்கத் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். இவனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் சிறுமியை, விளையாட அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான். இதனிடையே நடந்த சம்பவம் குறித்து பேசிய சிறுமியின் தயார் '' அண்ணன் கூட விளையாட வா' என்று எனது மகளை அந்த சிறுவன் அழைத்து சென்றுள்ளான்.

ஆனால் வெகு நேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பாததால், அந்த சிறுவனின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது தான் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து அனைவருக்கும் தெரியவர, அந்த சிறுவன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளான். உடனடியாக அருகில் இருந்தவர்கள் சிறுவனை ஹரியாணாவில் உள்ள டப்வாலி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதனிடையே சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது, அந்த பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Tags : #RAPE #SEXUALABUSE #NURSERY GIRL #PUNJAB