'சென்னை' சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம்'... 'கைதானவரின் மனைவி' செய்த அதிர வைக்கும் செயல்' !

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jun 29, 2019 10:49 AM

நான்கு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னை மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இந்த வழக்கில் கைதான முன்னாள் ராணுவ வீரரின் மனைவியும், கொலையை மறைக்க உதவிய அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

4 year old girl rape and murder Ex Militery man wife arrested

சென்னை திருமுல்லைவாயலை சேர்ந்த தம்பதியின் 4 வயது மகள் காணவில்லை என காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவர் கழிவறை வாளியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். சென்னையை அதிரவைத்த இந்த கொலை சம்பவத்தை விசாரித்த காவல்துறை, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு  கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் பக்கத்து வீட்டில் வசித்து வரும் சிறுமியின் பெரியப்பாவான முன்னாள் ராணுவ வீரரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அப்போது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை அந்த நபர் ஒப்பு கொண்டார். இந்நிலையில் சிறுமியின் பெரியப்பாவே இந்த சம்பவத்தில் ஈடுபட்டது அந்த பகுதி மக்களை ஆத்திரமடைய செய்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட மீனாட்சி சுந்தரத்திற்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கூறி, அந்த பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

இதற்கிடையே மீனாட்சி சுந்தரத்திடம் நடத்திய விசாரணையில், சிறுமியின் கொலையை மறைக்க அவரது மனைவி  ராஜம்மாளும் உதவியது தெரியவந்தது. இதையடுத்து ராஜம்மாளை கைது செய்த காவல்துறையினர், அவர் மீது தடயங்களை அளித்தது தொடர்பான பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மீனாட்சி சுந்தரத்தின் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், இருவரையும் முகப்பேர் மேஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதனிடையே, காவல்நிலையத்தில் வழுக்கி விழுந்ததில் மீனாட்சி சுந்தரத்தின் கை உடைந்தது. இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Tags : #RAPE #SEXUALABUSE #POLICE #CHENNAI #EX MILITERY MAN #WIFE #ARRESTED #THIRUMULLAIVOYAL