'மாணவியை கத்தியால் குத்திய இளைஞர்'... 'பிரேக் அப் செய்ததால் காதலர் ஆத்திரம்'... கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jun 25, 2019 12:06 PM

கோவையில் தனியார் கணினி பயிற்சி மையம் ஒன்றிலிருந்து வெளியே வந்த இளம்பெண், கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

young woman stabbed by ex boyfriend in coimbatore

கோவை மாவட்டம் ஆர்.எஸ் புரத்தில் தனியார்  கணிணி பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு வகுப்பை முடித்துவிட்டு கடந்த திங்கள்கிழமையன்று இரவு வெளியே வந்த மாணவி ஒருவரை, இளைஞர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார். அப்போது அருகில் இருந்த சக மாணவர்கள் கத்திகுத்து சம்பவத்தை தடுக்க முயற்சித்தனர். அவர்களுக்கும் கத்திகுத்து விழுந்தது.

இதையடுத்து தப்பித்து ஓட முயன்ற அந்த இளைஞரை, பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், கத்திக்குத்துக்கு ஆளான மாணவி, அமிர்தா என்பதும், கத்தியால் குத்திய இளைஞர் சுரேஷ் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இருவரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், கல்லூரி காலத்தில் இருவரும் காதலித்ததாகவும், பின்பு பிரச்சனை காரணமாக, மாணவி சுரேஷிடம் பழகுவதை தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ், மாணவியை கொலை செய்யும் நோக்கில் இவ்வாறு செய்ததாக தெரியவந்துள்ளது. கத்திக்குத்தை தடுக்க முயன்ற இரு மாணவர்கள் மற்றும் அந்த மாணவிக்கு அதிர்ஷ்டவசமாக லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டன. அவர்களுக்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சுரேஷிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

Tags : #ATTACK #LOVER #BREAKUP #KERALA #STUDENT