‘ஜெய் ஸ்ரீராம்’ என சொல்ல மறுத்த இஸ்லாமியரை ரயிலில் இருந்து தூக்கி வீசிய கும்பல்..! மீண்டும் அரங்கேறிய கொடூரம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jun 25, 2019 07:29 PM

‘ஜெய் ஸ்ரீராம்’ என சொல்ல மறுத்த மேற்குவங்க ஆசிரியரை ரயிலில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bengal teacher claims pushed off train for not saying Jai Shri Ram

கடந்த சில தினங்களுக்கு முன்பு இஸ்லாமியர் இளைஞர் ஒருவரை 12 மணி நேரமாக ‘ஜெய் ஸ்ரீராம்’என சொல்ல சொல்லிக் கடுமையாக தாக்கியதில் அந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேபோல், மாட்டுக்கறியை விற்றதற்காக கணவனின் கையால் மனைவியை அடிக்கவைத்து, இருவரையும் ஜெய் ஸ்ரீராம் என கூற சொன்ன வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் ஜெய் ஸ்ரீராம் என கூற மறுத்த இஸ்லாமியரை ரயிலில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள மதரசா என்னும் இஸ்லாமியர்களான பள்ளியில் ஹபீஸ் மோஹத் ஷாருக் ஹால்டர் என்வர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் சௌத் 24 பார்கனாஸ் மாவட்டத்தில் இருந்து ஹூக்ளிக்கு ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது ரயிலில் இருந்த ஒரு கும்பல் ஹபீஸை ‘ஜெய் ஸ்ரீராம்’ என சொல்ல சொன்னதாக கூறப்படுகிறது. ஆனால் ஹபீஸ் அவ்வாறு சொல்ல மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் பார்க் சர்க்கஸ் என்ற ரயில் நிலையத்தில், ரயில் சென்றுகொண்டிருந்தபோது ஹபீஸை கீழே தூக்கி வீசியுள்ளனர். இதில் ஹபீஸ் அதிர்ஷ்டவசமாக அங்கிருந்தவர்களால் காப்பாற்றப்பட்டார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags : #BENGAL #TEACHER #TRAIN