‘மீண்டும் ஒரு பொள்ளாச்சி’.. ‘சக மாணவர்களால் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்’.. இணையத்தில் வீடியோ வெளியாகி பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jul 04, 2019 04:33 PM

இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவை இணையத்தில் வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

5 teenagers rape collegemate nabbed after video goes viral

கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துவந்த 18 வயது மாணவியை சக மாணவர்கள் 4 பேர் காரில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் அதனை செல்போனில் வீடியோ எடுத்து பெண்ணை மிரட்டி வந்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் நடந்த சம்வத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து கர்நாடகா போலிஸார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தனர். பின்னர் போலிஸார் நடத்திய தீவிர விசாரணையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 4 மாணவர்களையும் போலிஸார் கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றிய மற்றொரு நபரையும் கைது செய்துள்ளனர். மேலும் இந்த வகையான வீடியோக்களை ஷேர் செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடிக்கப்படும் என போலிஸார் எச்சரித்துள்ளனர்.

முன்னதாக பொள்ளாச்சியில் 200 -க்கு மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழகத்தில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதே போன்ற சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் நடந்திருப்பது அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SEXUALABUSE #KARNATAKA #GANG RAPE