'எல்லோரும் கண்ண மூடிங்கோங்க' .. மாணவன் கழுத்தில் கோடரியை வைத்த ஆசிரியர்! நெஞ்சை பதைபதைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jul 03, 2019 06:57 PM

தனியார் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவரை கோடாரியால் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

WATCH: Teacher uses axe to frighten a student in Jammu Kashmir

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள வாகாட் என்னும் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கிவருகிறது. இப்பள்ளியில் மாணவர்கள் பலர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை ஆசிரியர் ஒருவர் மாணவரை கோடாரியால் தாக்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் ஆசிரியர் ஒருவர் 9 வயது மாணவருக்கு தண்டனை கொடுக்கும் விதமாக கோடாரியால் தாக்க முயற்சி செய்கிறார். இதனால் அதிர்ச்சியான அந்த மாணவர் பயத்தில் கதறி அழுகிறார். இதனை அருகில் இருக்கும் மாணவர்கள் மிரட்சியுடன் பார்த்துக்கொண்டி இருக்கின்றனர். எதற்காக மாணவரை சுத்தியலால் தாக்கினார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து, இதுகுறித்து போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். முன்னதாக ஜம்மு காஷ்மீர் உள்ள பள்ளி ஒன்றில் டியூசனுக்கு தாமதமாக வந்த காரணத்திற்காக மாணவர்களை ஆசிரியர் கொடூரமாக தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags : #JAMMUKASHMIR #TEACHER #STUDENT #SCHOOL #AXE