‘யாராவது குடிக்க கொஞ்சம் தண்ணி தாங்களேன்’. நிர்வாணமாக கெஞ்சிய முதியவர்! நெஞ்சை உறைய வைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jul 03, 2019 01:16 PM

அரசு மருத்துவமனையில் முதியவர் ஒருவர் குடிக்க தண்ணீர் கேட்டு கெஞ்சிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Old man struggled for drinking water at Salem government hospital

சேலம் மாவட்டம் மோகன் குமாரமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சுமார் 80 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் சிகிச்சை பெற்றுவருகிறார். கவணிக்க ஆள் இல்லாததால் நீண்ட நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த முதியவருக்கு தண்ணீர் தாகமாக இருந்ததால் அருகில் இருந்தவர்களிடம் தண்ணீர் கேட்க முயற்சித்துள்ளார். இதனால் எழுந்த போது படுக்கையில் இருந்து கீழே விழுந்த அவர், நிர்வாணமாக கையில் காலி பாட்டிலுடன் அவ்வழியே செல்பவர்களிடம் தண்ணீர் கேட்ட சம்பவம் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

முதியவரை உடன் இருந்து கவனிக்க யாரும் இல்லாததால் படுக்கையில் இருந்து இப்படி அடிக்கடி கீழே விழுந்து விடுவதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 1 மணி நேரமாக தண்ணீருக்காக கெஞ்சுகிறார், ஆனால் எங்களுக்கே குடிக்க தண்ணீர் இல்லாததால் அவருக்கு கொடுக்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் குடிநீர் பிடிக்க வேண்டுமானல் மூன்றாவது மாடியில் இருந்து கீழே சென்றுதான் பிடிக்க வேண்டும். அங்கும் தண்ணீர் பிடிக்க ஒரு மணி நேரம் காத்திருக்கவேண்டி இருக்கிறது என மருத்துவமனை ஊழியர்கள் தங்களது வேதனையை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தெரிவித்த மருத்துவமனையின் டீன் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக விகடன் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #SALEM #HOSPITAL #WATERSCARCITY