'சிவப்பு கலர் பைக், ஹெல்மெட், மிரளவைத்த சீரியல் கில்லர்... 'மதியம் தனியாக இருக்கும் பெண்கள்தான் டார்கெட்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Jun 05, 2019 10:13 AM

சைக்கிள் செயின், இரும்புக் கம்பிகளை பயன்படுத்தி பெண்களை கொன்று வந்த சீரியல் கொலைகாரர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

serial killer murdered 5 women with cycle chain in wes bengal

மேற்கு வங்கத்தில் கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் புதுல் மாஜி என்ற இளம்பெண் கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்டார். வீட்டில் தனியாக இருந்த அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக  சிசிடிவி பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். இந்நிலையில் மெமரி காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இதே பாணியில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

சிசிடிவி காட்சிகளின் அடிப்டையில், அதில் இடம்பெற்றிருந்த சந்தேகப்படும்படியான நபரின் விவரங்களை காவல்துறையினர் வெளியிட்டிருந்தனர். சிவப்பு கலர் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சந்தேகப்படும்படியாக இருந்தார். அவரைப் பிடித்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளிவந்துள்ளன. கமருசமான் சர்க்கார் என்ற 42 வயதான நபர் ஒரு சீரியல் கொலைகாரர் என்பது தெரியவந்தது.

கமருசமானுக்கும், புதுல் மாஜி கொலைக்கும் சம்பந்தம் உள்ளதை கண்டறிந்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்தனர். இதில், புதுல் மாஜிக்கு முன்பாக 4 பெண்களை கமருசமான் கொலை செய்திருக்கிறார். மதிய நேரத்தில் பெண்கள் தனியாக இருக்கும் வீட்டிற்குள் செல்லும் அவர், தான் மின் ரீடிங் எடுப்பதற்கு வந்ததாக கூறிக் கொள்வாராம். சமயம் பார்த்து சைக்கிள் செயின் மற்றும், இரும்புக் கம்பியால் பெண்களை தாக்கி அவர்களை கொலை செய்து வந்துள்ளார்.

இதன்பின்னர் ரத்தவெள்ளத்தில் கிடக்கும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார், இதையடுத்து வீட்டில் இருந்த விலையுயர்ந்த பொருள்களை கொள்ளை அடித்துச் சென்றுள்ளார். ஆனால் கொள்ளை அடிப்பது அவரது நோக்கம் அல்ல என்று போலீசார் தெரிவித்தனர். பெண்களைக் கொலை செய்வதே தனது  முதல் குறிக்கோள் எனக் கூறிய சர்க்கார், இதையெல்லாம் ஏன் செய்கிறேன் என எனக்கே தெரியவில்லை என போலீஸை மிரள வைத்துள்ளார்.

Tags : #SERIALKILLER #WESTBENGAL #SARKAR #SEXUALABUSE