‘அழிக்காதே அழிக்காதே, தமிழ்நாட்டை அழிக்காதே...’ காணாமல் போன முகிலன் திடீரென வந்தது எப்படி...? பரபரப்பு வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Jul 07, 2019 12:09 AM
காணமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலனை ஆந்திர போலிஸார் பிடித்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 15 -ம் தேதி சமூக செயற்பாட்டளர் முகிலன் ஊருக்கு செல்வதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தவர் வீடு வந்து சேரவில்லை என அவரது மனைவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை அடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி போலிஸாருக்கு மாற்றப்பட்டி தனிப்படை அமைத்து முகிலனை தேடி வந்தனர். இதனிடையே முகிலனின் நண்பர் சண்முகம் என்பவர் திருப்பதி ரயில் நிலையத்தில் போலிஸாருடன் முகிலன் சென்றதை தான் பார்த்தாக முகிலனின் மனைவியிடம் போனில் தெரிவித்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திருப்பதி ரயில் நிலையத்தில் கோஷமிட்டபடி செல்லும் முகிலனை போலிஸார் அழைத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் ‘அழிக்காதே அழிக்காதே, தமிழ்நாட்டை அழிக்காதே. நியாயமா, நியாயமா கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது நியாயமா’ என்பது போன்ற கோஷங்களை அவர் எழுப்பிக்கொண்டே செல்கிறார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
