‘டீச்சர் சாதியை சொல்லி திட்றாங்கம்மா’.. ‘டாய்லெட் கழுவ சொல்லுவாங்க’.. கலெக்டர்முன் கண்ணீருடன் நின்ற பெற்றோர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jun 25, 2019 12:49 PM

அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பட்டியில் இன மாணவர்களை டாய்லெட் கழுவ வைத்த சம்பவம் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Teacher discriminates a student in the name of caste in coimbatore

கோவை மாவட்டம் சரவணம்பட்டி அருகே கரட்டுமேடு கந்தசாமி நகரில் அரசு ஆரம்பப் பள்ளி இயங்கு வருகிறது. இப்பள்ளியில் 50 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளி தலைமை ஆசிரியர் பட்டியலின மாணவ, மாணவிகளை சாதி ரீதியதாக துன்புறுத்துவதாக கோவை கலெக்டரிடம், அவர்களது பெற்றோர்கள் மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.

மொத்தமாக இரண்டு ஆசியர்கள் உள்ள இப்பள்ளியில் ஆசிரியை ஜெயந்தி என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் காலனித்தெருவில் இருந்து வரும் மாணவ, மாணவிகளை சாதியை சொல்லி திட்டுவதாகவும், டாய்லெட்டை கழுவ சொல்லுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் ‘டீச்சர் சாதிய சொல்லி திட்றாங்கம்மா, எங்கலதான் டாய்லெட் கழுவ சொல்றாங்க’ என சோகத்துடன் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து குழந்தைகளின் பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் சென்று விசாரித்தபோது, ‘நான் கவர்மெண்ட் ஸ்டாப், உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோங்க’ என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கோவை மாவட்ட கலெக்ட்ரை சந்தித்த குழந்தைகளின் பெற்றோர், சாதியின் பெயரை சொல்லி தலைமை ஆசிரியரால் தங்களது குழந்தைகள் படும் கஷ்டத்தை கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக மனு ஒன்றையும் கலெக்டரிடம் அளித்துள்ளனர். தீண்டாமை பற்றி கற்றுக்கொடுக்க வேண்டிய ஆசியரியரே, சாதியின் பெயரை சொல்லி மாணவர்களை துன்புறுத்திய சம்பவம் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #UNTOUCHABILITY #TEACHER #COIMBATORE