'இனிமேல் இப்படி பண்ணுவியா'... 'கேமராவில் சிக்கிய ஆசிரியர்'...பதற வைக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Jul 05, 2019 10:46 AM
பள்ளிக்கு வராமல் விடுப்பு எடுத்ததால் தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர், மாணவனை அடித்து துவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அல்லிபுரம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவன் ஒருவன் பள்ளிக்கு வராமல் நான்கு நாட்கள் விடுப்பு எடுத்துள்ளான். இதையடுத்து நான்கு நாட்கள் கழித்து பள்ளிக்கு வந்த மாணவனை ஆசிரியர் ஒருவர் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஆசிரியர் மாணவனை அடிப்பதை ஒருவர் போட்டோ எடுத்து விட, அது தற்போது பெரும் புயலை கிளப்பியுள்ளது.
இதனிடையே நடந்த சம்பவம் தொடர்பாக மாணவனின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து மாணவனை கடுமையாக தாக்கிய ஆசிரியர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags : #SCHOOLSTUDENT #STUDENTS #ANDHRA PRADESH #ALLIPURAM #SCHOOL #THRASHES #TEACHER