‘10 நிமிஷம் லேட் அதுக்குனு இப்டியா அடிப்பீங்க’.. ‘வலியால் துடிதுடித்த மாணவர்கள்’.. நெஞ்சை பதபதைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jun 20, 2019 01:01 PM

பள்ளிக்கு தாமதமாக வந்ததாக கூறி மாணவர்களை கொடூரமாக தாக்கும் ஆசிரியரின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

WATCH: Teacher thrashes students for being 10 mins late to school

ஜம்மு காஷ்மீரில் உள்ள தோடா மாவட்டத்தில் குஜ்ஜர், பகேர்வால் என்னும் மாணவர்கள் விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் 6,7,8 -ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தங்கியுள்ளனர். இதனை அடுத்து அங்கு வழக்கமாக நடைபெறும் டியூசனுக்கு மாணவர்கள் 10 நிமிடம் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ஆசிரியர் மாணவர்களுக்கு தண்டனை கொடுக்கும் விதமாக அனைவரையும் கீழே குனியவைத்து கம்பைக் கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனை அங்கே இருந்த ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற குழந்தைகள் நல அமைப்பினர் மாணவர்களை மீட்டுள்ளனர். இது தொடர்பாக விளக்கமளிக்க குழந்தைகள் நலவாழ்வுக் குழு முன் ஆஜராக வேண்டும் என ஆசிரியருக்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும் ஆஜராக தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : #VIRALVIDEO #STUDENTS #TEACHER #JAMMUKASHMIR