'அடிச்சான்பாரு அப்பாய்மெண்ட் ஆர்டர்'.. ரூ.15 லட்சம் ஏமார்ந்த என்ஜினியரிங் பட்டதாரி.. அரசுப்பள்ளி ஆசிரியரின் நூதனம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Jun 07, 2019 05:13 PM
அரசு வேலைப் பெற்றுத்தருவதாக பட்டதாரி இன் ஜினியரை பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் ஏமாற்றி, லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பார்த்தபாளையத்தில் வசித்துவரும் கோவிந்தனின் மகன் எழிலரசன் பொறியியல் பட்டதாரி. தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த எழிலரசன், சைடில் கவர்மெண்ட் வேலைக்கும் முயற்சி செய்துகொண்டிருந்தார். அதைத் தெரிந்துகொண்ட, ஆம்பூர் பெரியாங்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் கமலக்கண்ணன் (வயது 46), எழிலரசனிடம் அரசு வேலை பெற்றுத்தருவதாகக் கூறி கடந்த 2017-ல், 25 லட்சம் ரூபாயை கேட்டுள்ளார். அரசு உத்தியோகத்தின் மீதான ஆசையில் எழிலரசனோ, 15 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை 3 தவணைகளாக கமலக்கண்ணனிடம் கொடுத்துள்ளார்.
ஆனால் கமலக் கண்ணனோ அந்த பணத்தை எல்லாம் பெற்றுக்கொண்டு தலைமை செயலகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்புத்துறையில் உதவி பி.ஆர்.ஓ பணியை பெற்றுத்தருவதாகக் கூறி, அதற்கான போலி அப்பாய்மெண்ட் ஆர்டரையும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் லெட்டர் பேடு போலவே தயார் செய்து தந்துள்ளார். அதை நம்பி சென்னை தலைமை செயலகத்துக்குச் சென்றபோதுதான் எழிலரசன், தான் கமலக்கண்ணனிடம் ஏமாறியதை உணர்ந்துள்ளார். பின்னர் கமலகண்ணிடம் நேராக சென்று கொடுத்த பணத்தை எழிலரசன் கேட்டதற்கு அவர் செக் போட்டு தந்துள்ளார்.
ஆனால் அந்த செக் எல்லாம் பவுன்ஸ் ஆகி ரிட்டர்ன் வந்ததால், எழிலரசன் இதுபற்றி ஆம்பூர் தாலுகா போலீஸில் ஆசிரியர் கமலக்கண்ணன் மீதும், அவருக்கு உறுதுணையாக இருந்த ராகேஷ் கண்ணா, சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்டோர் மீதும் அளித்த புகாரின் பேரில் மோசடிக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.