'இப்படி முடியும்னு நெனைக்கல'.. 'மன்னிச்சிருங்க'.. ஹாஸ்டல் அறையில் ஐஐடி மாணவர் தற்கொலை.. கலங்க வைக்கும் காரணம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jul 03, 2019 12:38 PM

ஹைதராபாத், ஐஐடி பல்கலைக் கழகத்தில் டிசைன் பிரிவில் மாஸ்டர் டிகிரி படித்துக்கொண்டிருந்த இந்த மாணவர்,  திங்கள் கிழமை அன்று தனது அறைக்குள் சென்று அறையை தாழிட்டுக் கொண்டார். ஆனால் செவ்வாய் கிழமை நீண்ட நேரம் ஆகியும் கதவைத் திறக்காததால், சந்தேகப்பட்ட சக மாணவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

IIT - Hyderabad Student Kills himself in his hostel room

அப்போதுதான் அந்த மாணவர் தற்கொலை செய்துகொண்ட விபரம் அனைவருக்கும் தெரியவந்ததை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், தற்கொலை செய்துகொண்ட மாணவர் வாரணாசியைச் சேர்ந்தவர் என்பதை அறிந்ததும், அவரது தாய், தந்தையருக்கு தகவல் அளித்துள்ளனர்.

மேலும் மாணவரின் அறையில், அவரே கைப்பட எழுதிய டைரிக்குறிப்பு இருந்ததாக போலீஸார் கூறியுள்ளனர். அந்த டைரிக் குறிப்பில், ‘என் வாழ்க்கை இப்படி முடியும்னு நான் நெனைக்கல. என்னைப் பிரிந்துவிட்டதாக யாரும் நினைக்க வேண்டாம். நான் எதற்கும் உபயோகமில்லாதவனாக உணர்கிறேன். நண்பர்கள் நண்பர்களாய் அன்பைக் காட்டினார்கள். அவர்களுக்கு திருப்பித்தர அன்புதான் உகந்தது. என் பெற்றோருக்கு நன்றி. என்னை மன்னித்துவிடுங்கள். நான் பிரயோஜனமில்லாதவன்’ என்று எழுதியிருந்ததாக போலீஸார் கூறியுள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.  இதே போல், கடந்த ஜனவரி மாதம், இந்த பல்கலைக் கழகத்தில் பி.டெக் கடைசி வருடம் படித்துக்கொண்டிருந்த மாணவர், பில்டிங்கின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags : #HYDERABAD #IIT #STUDENT #SUICIDE