'பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி 7 பேர் பலி...' வெடி மருந்துகளில் ஏற்பட்ட திடீர் உராய்வினால்...' சாத்தூரில் மீண்டும் சோகம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 20, 2020 06:45 PM

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மீண்டும் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Seven people killed in fireworks factory fire near Chatur

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சிப்பிப்பாறை பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. பட்டாசு தொழிற்சாலையில் எப்போதும் போல இன்றும் வெடி மருந்து தயாரித்துள்ளனர்.  வெடி மருந்துகளில் திடீரென உராய்வு ஏற்பட்டதில் யாரும் எதிர்பாராத போது மிக பெரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

பட்டாசு வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 தொழிலாளர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

வெடி விபத்து சம்பவத்தை அறிந்து வெம்பக்கோட்டை, சிவகாசி பகுதிகளில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் விபத்து ஏற்பட்ட இடத்திற்கு மாவட்ட எஸ்.பி, துணை ஆட்சியர் உள்ளிட்ட உயரதிகாரிகள் விரைந்துள்ளனர்.

பட்டாசு ஆலையில் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து வருவதால் தீயை அணைப்பதற்கு காலதாமதம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். மேலும் பட்டாசு ஆலையின் கட்டிடத்திற்குள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாநில அரசு எந்த ஒரு தொழிற்சாலைகளிலும் 50 பேருக்கு மேல் பணியில் அமர்த்த கூடாது என்று நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன் அடிப்படையில் இன்று 30 பேர் மட்டும் வேலைக்கு வந்திருந்ததால் உயிர்ச் சேதம் குறைவாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : #FIREACCIDENT