‘பேருந்தில் திடீரென பிடித்த தீ’... ‘வெடித்து சிதறிய கண்ணாடிகள்’... ‘அலறியடித்து ஓடிய பயணிகள்’... ‘சேலம் அருகே நடந்த பரபரப்பு சம்பவம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Feb 18, 2020 11:27 AM

சேலம் அருகே தனியார் பேருந்து பயணிகள் இருந்த நிலையில், திடீரென தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Private Bus Fire Accident near Salem, No one Injured

வேம்படிதளத்தில் இருந்து சேலம் பழைய பேருந்து நிலையம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. கந்தம்பட்டியில் சென்றபோது, பேருந்தின் அடிப்பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியானது. இதனால் பதறிப்போன ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு, பேருந்தை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டடார். பின்னர் வேகவேகமாக பயணிகளை இறங்கச் சொல்லி உஷார் படுத்தினார்.

எனினும் பேருந்தில் இருந்து அனைவரும் இறங்கிக்கொண்டிருக்கும்போது பேருந்தில் தீப்பற்றி மளமளவென எல்லா இடத்திற்கும் தீ பரவத் தொடங்கியது. இதில் பேருந்தின் கண்ணாடிகள் வெடித்து சிதறியதால் பயணிகள் அலறி அடித்து ஓடினர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 30 நிமிடம் போராடி தீயை அணைந்தனர்.  இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #FIREACCIDENT #SALEM