‘வீட்டில் நடப்பது தெரியாமல்’... ‘டிவி பார்த்துக் கொண்டிருந்த பெண்’... 'பதறியடித்து ஓடிப் போய்‘... ‘பார்த்தபோது நிகழ்ந்த பயங்கரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Feb 18, 2020 02:59 PM

மதுரையில் பக்கத்து வீட்டில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தபோது தனது வீட்டில் தீ பிடித்தது தெரியாமல் திடீரென உள்ளே நுழைந்ததில் பெண் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Woman died after suffocated while watching TV in Madurai

மதுரை காமராஜர்புரம் அண்ணா மேலத்தெருவை சேர்ந்தவர் 43 வயதான லட்சுமி. கணவர் ரமேஷ் உடன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து, மேலத்தெருவில் தனி வீட்டில் வசித்து வருகிறார். இவருடைய இரண்டு ஆண் குழந்தைகளும், விவாகரத்து வழக்கு நடந்து வருவதால கணவருடன் உள்ளனர்.  லேமினேசன் கடையில் பணியாற்றி வந்த லட்சுமியின் வீட்டில், டிவி உள்ளிட்ட வசதிகள் இல்லை.

இதனால் வேலை முடித்து வந்தப் பின்னர், அருகில் உள்ள வீட்டில் சீரியல் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில், நேற்று மாலை வழக்கம் போல் அண்டை வீட்டில் லட்சுமி மும்முரமாக டிவி பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டில் இருந்து புகை வந்ததை பார்த்து, பதறிப்போன அருகில் இருந்த வீட்டை சேர்ந்தவர்கள், லட்சுமியிடம் சென்று கூறியுள்ளனர். இதையடுத்து அதிர்ச்சியடைந்து உடனே வீட்டிற்குள் ஓடிய லட்சுமி, கதவை திறந்து உள்ளே சென்றதும் புகை மூட்டத்தில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கினார்.

இதையடுத்து தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது, உடல் கருகிய நிலையில் லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. அவரின் சடலத்தைக் கைப்பற்றிய கீரைத்துறை போலீசார், தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கருத்து வேறுபாட்டில் குடும்பத்தை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த பெண், பரிதாபமாக  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #FIREACCIDENT #WOMAN #DIED