‘அலறல்’ சத்தம் கேட்டு ‘ஓடிவந்த’ அக்கம்பக்கத்தினர்... ‘நள்ளிரவில்’ தூங்கிக்கொண்டிருந்த... ‘தம்பதிக்கு’ நேர்ந்த ‘பயங்கரம்’...
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஜோலார்பேட்டை அருகே ஏசி வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த வக்கணம்பட்டியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் ரயில்வே பாதுகாப்புப்படையில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு அவர் வீட்டின் படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென ஏசி வெடித்து அறை முழுவது தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது.
இதில் தூங்கிக்கொண்டிருந்த சண்முகத்தின்மீது முதலில் தீப்பற்றியுள்ளது. பின்னர் அவரைக் காப்பற்றுவதற்காக சென்ற அவருடைய மனைவி வெற்றிசெல்வி மீதும் தீப்பற்றியுள்ளது. இதைத்தொடர்ந்து அவர்களுடைய அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
90 சதவிகித காயங்களுடன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சண்முகம் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவருடைய மனைவி வெற்றிசெல்வி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மின்கசிவால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
