VIDEO: ‘லாரிக்கு டீசல் நிரப்பிய டிரைவர்’.. ‘திடீரென பற்றி எரிந்த தீ’.. சென்னை பெட்ரோல் பங்கில் நடந்த பயங்கரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை பெட்ரோல் பங்கில் கண்டெய்னர் லாரிக்கு டீசல் நிரப்பிக்கொண்டிருந்தபோது டிரைவர் மீது திடீரென தீப்பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் கண்டெய்னர் லாரி டிரைவர் ஒருவர் டீசல் நிரப்பச் சென்றுள்ளார். டீசல் சரியாக நிரப்பப்படுவதை உறுதிப்படுத்த தானே டீசல் பம்பை பிடித்துக்கொண்டு நின்றுள்ளார். அப்போது திடீரென டீசல் டேங்கில் இருந்து வெளியேறிய தீ, டிரைவரின் உடலில் பற்றி எரிந்துள்ளது.
இதனால் அலறி அடித்துக்கொண்டு அங்கிருந்து ஓடியுள்ளார். உடனே அருகில் இருந்தவர் அவரின் உடலில் பற்றிய தீயை அணைத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. படுகாயம் அடைந்த லாரி டிரைவர் உத்தரப்பிரதேச மாநிலம் கேராய் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் சிங் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
