‘26 பயணிகளுடன்’ சென்றுகொண்டிருந்த ‘தனியார்’ பேருந்து... சாலையில் ‘திடீரென’ தீப்பிடித்து ‘எரிந்த’ பயங்கரம்... ‘பரபரப்பு’ சம்பவம்...
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலுங்கானாவில் சாலையில் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
26 பயணிகளுடன் இன்று காலை மும்பையிலிருந்து ஹைதராபாத் நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. ராமச்சந்திராபுரம் அருகே நடந்த இந்த பயங்கர விபத்தில் பயணிகள், ஓட்டுநர், நடத்துநர் என அனைவரும் அதிருஷ்டவசமாக நூலிழையில் உயிர் தப்பியுள்ள நிலையில் பேருந்து முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்துள்ளனர். மேலும் எஞ்சின் ஷார்ட் சர்கியூட் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
Tags : #ACCIDENT #FIREACCIDENT #TELANGANA #HYDERABAD #BUS #FIRE