#WATCH #VIDEO: ‘கொரோனா எதிரொலி’... 'ஒரு மீட்டர் DISTANCE MAINTAIN செய்த’... 'தமிழக' குடிமகன்கள்... வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 20, 2020 06:36 PM

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஈரோட்டில் மக்கள் ஒருவரை ஒருவர் தொடாமல் இடைவெளி விட்டு நின்று மது வாங்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Erode TASMAC Drunkens Social Distancing Video went Viral

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகளவில் கொரோனா பரவுதை தடுக்க சோஷியல் டிஸ்டன்சிங் எனப்படும், பொது இடங்களில் ஒருவொருக்கொருவர் இடைவெளி விட்டு மக்கள் விலகி இருக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து கேரளாவில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மதுபானக் கடைகளில் மதுபாட்டில்கள் வாங்குவோர் 10 மீட்டர் இடைவெளி விட்டு நின்று வாங்கிய புகைப்படம் வைரலானது.

இந்நிலையில், தமிழகத்திலும் ஈரோடு மொடக்குறிச்சியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் வாங்க காத்திருந்த மக்கள், இடைவெளிவிட்டு நிற்கும் வீடியோ வைரலாகி உள்ளது. முன்னதாக டாஸ்மாக் பார்களை அடைக்க உத்தரவிட்ட தமிழக அரசு மதுக்கடைகளை அடைக்க உத்தரவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #TASMAC