‘15 பேர் பலி!’... ‘எண்ணெய் குழாய் வெடித்துச் சிதறியதில் உண்டான பயங்கர தீவிபத்தால் சோகம்!’

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 16, 2020 02:19 PM

நைஜீரியாவில் எண்ணெய் குழாயில் உண்டான பயங்கர தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.

atleast 15 Killed in nigeria gas explosion நைஜீரியா தீ விபத்து

தலைநகர் லோகோசில் நடந்த இந்த கோர சம்பவத்தில் 50க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. தீவிபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததை அடுத்து மக்கள் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டனர். தீ விபத்து உண்டானதை அடுத்து இதுபற்றி தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர், இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.

மேலும் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் இன்னும் முழுமையாக தெரியவில்லை என்று மீட்புப் படையினர் தெரிவித்தனர்.

Tags : #FIREACCIDENT #NIGERIA