‘காதலிக்க மறுத்த மாற்றுத் திறனாளி பெண்’... ‘நண்பருடன் சேர்ந்து இளைஞர் செய்த காரியம்’... 'சென்னையில் நடந்த சோகம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 10, 2020 03:43 PM

சென்னையில் காதலிக்க மறுத்த மாற்றுத்திறனாளி பெண்ணின் இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chennai man sets fire to two wheeler for woman refused

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான மல்லிகா என்ற பெண், சோழவரத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவரை காதலித்துள்ளார். பின்னர், அந்த நபரின் நடவடிக்கை பிடிக்காததால் மல்லிகா, பிரபாகரனை விட்டு பிரிந்துள்ளார். எனினும் பிரபாகரன் மல்லிகாவை விடாமல் பின் தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. தன்னை காதலிக்காவிட்டால் மல்லிகாவையும், அவரது இருசக்கர வாகனத்தையும் எரித்து விடுவதாக மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 17-ம் தேதி இரவு வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த மல்லிகாவின் வாகனம் தீவைத்து எரிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரில் செம்பியம் காவல்துறையினர் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, பிரபாகரன் தனது நண்பருடன் சேர்ந்து வாகனத்தை எரித்த காட்சிகள் பதிவாகியிருந்தன. இதனையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #FIREACCIDENT #CCTV #CHENNAI