‘திடீரென’ வெடித்துச் ‘சிதறிய’ பேருந்து... ‘அருகே’ சென்றதால் சிக்கிக் கொண்ட ‘கார்கள்’... கோர விபத்தில் சிக்கி ‘7 பேர்’ பலியான பரிதாபம்...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Feb 19, 2020 04:49 PM

கொலம்பியாவில் பேருந்து வெடித்துச் சிதறிய விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Accident Fiery Bus Explosion In Colombia Kills 7 Injures 11

கொலம்பியாவின் கவ்கா பிராந்தியத்திற்கு உட்பட்ட ரோசா நகரில் நேற்று முன்தினம் இரவு சாலையில் சென்றுகொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று திடீரென  வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் அப்பகுதியே அதிர, அந்தப் பேருந்தின் அருகில் சென்றுகொண்டிருந்த 2 கார்களும் இதில் சிக்கி சேதமடைந்துள்ளன. இந்த கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் படுகாயமடைந்த 11 பேர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தொடக்கத்தில் இது ராணுவ வீரர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு எனக் கருதப்பட்ட நிலையில், இது பயங்கரவாத தாக்குதல் அல்ல, விபத்தே என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. எனினும் விபத்துக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags : #ACCIDENT #FIREACCIDENT #COLOMBIA #EXPLOSION #BUS #CAR