'ஆல்ரெடி' 2 பேரு... இருந்தாலும் 'ஆசை' யார விட்டுச்சு?... 'தீயில்' சிக்கி உயிருக்கு 'போராடும்' மேஸ்திரி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பழனி. கட்டிட மேஸ்திரியான இவருக்கு நீலா, ரத்தினம், சவுமியா என 3 மனைவிகள் உள்ளனர். இதில் 2-வது மனைவி ரத்தினத்துடன் பெங்களூரில் தங்கி பழனி வேலை செய்து வந்துள்ளார். சவுமியா குழந்தைகளுடன் சொந்த ஊரில் வசித்து வந்துள்ளார். சவுமியா தங்கியிருந்த ஊருக்கு வேலுச்சாமி(27) என்னும் கட்டிட மேஸ்திரி அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது சவுமியா, வேலுச்சாமி இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இந்த நிலையில் கடந்த 4-ம் தேதி சவுமியா வீட்டிற்கு வந்த வேலுச்சாமி அவரை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். அதற்கு சவுமியா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட, ஆத்திரத்தில் சவுமியா மண்ணெண்ணெய் எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்வதாக மிரட்டி இருக்கிறார். இதைப்பார்த்த வேலுச்சாமி அவர்மீது தீக்குச்சியை கொளுத்திப்போட, உடனே சவுமியா எரியும் தீயுடன் வேலுச்சாமியை கட்டிப்பிடித்து இருக்கிறார். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து, இருவரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சவுமியா இறந்து விட, வேலுச்சாமி தற்போது உயிருக்கு போராடி வருகிறார். போலீஸ் விசாரணையில் வேலுச்சாமியுடன் உறவில் இருந்தபோதே வேறு ஒருவருடன் சவுமியா உறவில் இருந்ததால் தான், இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. வேலுச்சாமிக்கும் ஏற்கனவே 2 காதலிகள் இருந்ததாகவும், சவுமியா 3-வது காதலி என்றும் கூறப்படுகிறது.
