‘நடுவானில்’ ஒன்றோடொன்று மோதிக்கொண்ட ‘விமானங்கள்’... தீப்பிடித்து ‘வயலில்’ விழுந்து ‘நொறுங்கிய’ பயங்கரம்...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Feb 19, 2020 07:58 PM

ஆஸ்திரேலியாவில் 2 சிறிய ரக விமானங்கள் நடுவானில் மோதி கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

Accident 2 Planes Collide In Australia Killing 4 On Board

ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் உள்ள கிராமப்புற பகுதியில் இன்று காலை 2 விமானங்கள் பறந்து சென்று கொண்டிருந்துள்ளன. இந்நிலையில் விமானங்கள் தரையிலிருந்து 4 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென நடுவானில் ஒன்றோடொன்று மோதி விபத்தில் ஏற்பட்டுள்ளது. மோதியதில் தீப்பிடித்த விமானங்கள் வயலில் விழுந்து நொறுங்கியுள்ளன.

இந்த பயங்கர விபத்தில் இரு விமானங்களிலும் இருந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #ACCIDENT #FIREACCIDENT #PLANE #CRASH #AUSTRALIA