‘வீட்டில் மனைவி தூக்கிட்டு தற்கொலை’.. அடுத்தநாள் 2 குழந்தைகளுடன் கணவர் எடுத்த விபரீத முடிவு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Feb 04, 2020 11:21 AM

ராணிப்பேட்டை அருகே மனைவி இறந்த சோகம் தாங்காமல் குழந்தைகளுடன் கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Ranipet father jumped in front of train with two daughters

ராணிப்பேட்டை மாவட்டம் கொடைக்கல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (30). இவரது மனைவி நிர்மலா (24). இந்த தம்பதியனருக்கு 2 மற்றும் 1 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இதில் வெங்கடேசன் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் நிர்மலா தூக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனையில் இருந்த வெங்கடேசன் தனது இரண்டு குழந்தைகளுடன் வாலாஜாபேட்டை ரயில் நிலையம் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் முன் இரண்டு குழந்தைகளுடன் பாய்ந்துள்ளார். இதில் மூவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். தகவலறிலந்து வந்த போலீசார் மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மனைவி இறந்த துக்கம் தாங்காமல் குழந்தைகளுடன் கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SUICIDEATTEMPT #KILLED #HUSBANDANDWIFE #RANIPET #CHILDREN