‘என்னோட உறவினர் கிட்ட பேசு’... ‘மறுத்த மனைவி’... ‘கணவன் செய்த விபரீத காரியம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Feb 03, 2020 03:21 PM

பொள்ளாச்சி அருகே உறவினருடன் மனைவி பேச மறுத்ததால், கணவர் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Husband Committed Suicide Because of his Wife refuse to talk

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்துள்ள லட்சுமி நகர் பகுதியில் வசித்து வருபவர் சபரி ராஜ் (47). இவர் கட்டிட காண்ட்ராக்ட் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பரிமளம். இவர் வடசித்தூர் அரசுப் பள்ளியில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு நெய்தலா (18) என்ற மகள் உள்ளார். இவர் கோவையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வருகிறார்.

சபரி ராஜுக்கு குடிப்பழக்கம் இருப்பதனால், தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து அவருடைய மனைவி பரிமளத்திடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மது அருந்திவிட்டு சபரி ராஜ் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது சபரி ராஜின் உறவினர் புதிதாக கட்டிய வீட்டிற்கு கிரகப் பிரவேச விழாவிற்கு அழைப்பிதழ் வைப்பதற்காக சபரி ராஜ் வீட்டுக்கு வருவதாக போன் செய்து பேசியுள்ளார். அப்போது சபரி ராஜ் தனது மனைவியிடம் போனை கொடுத்து, உறவினரிடம் பேசு என்று சொல்லி இருக்கிறார்.

ஆனால் அப்போது சபரி ராஜ் குடிபோதையில் இருந்ததால் பரிமளம் பிறகு பேசுகிறேன் என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சபரி ராஜ் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து தன் தொடைப் பகுதியில் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் ரத்தம் அதிக அளவில் வெளியேற, ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த சபரி ராஜை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சபரி ராஜை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுபற்றி கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குறிப்பு: தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Tags : #SUICIDEATTEMPT #HUSBANDANDWIFE #SUICIDE #COIMBATORE #FAMILY