‘அலறல்’ சத்தம் கேட்டு ‘பதறியோடிய’ பெற்றோர்... ‘திருமணமான’ 4 மாதத்தில்... கணவன், மனைவி ‘அடுத்தடுத்து’ செய்த ‘அதிரவைக்கும்’ காரியம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Feb 01, 2020 08:06 PM

சேலத்தில் திருமணமான நான்கே மாதத்தில் கணவன், மனைவி அடுத்தடுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Salem Husband Wife Attempt Suicide After 4 Months Of Marriage

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த தீபக் (24) என்பவரும், அவருடைய மாமா மகளான வேதவள்ளி (21) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து அவர்களுடைய காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதித்த நிலையில், 4 மாதங்களுக்கு முன் அவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல வேதவள்ளி கணவரை வேலைக்கு அனுப்பி வைத்துவிட்டு தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் வீட்டிற்குள் இருந்து அலறல் சத்தம் கேட்க, வேதவள்ளியின் பெற்றோர் பதறியடித்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக வேதவள்ளியை மீட்ட அவர்கள் சிகிச்சைக்காக அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மனைவி தற்கொலைக்கு முயன்றதை அறிந்த தீபக் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைத்தொடர்ந்து அவரை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், வேதவள்ளி சிறுநீரகத்தில் படிந்துள்ள கற்களால் வலி தாங்கமுடியாமல் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. திருமணமான நான்கே மாதத்தில் கணவன், மனைவி அடுத்தடுத்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.

Tags : #SUICIDEATTEMPT #SALEM #MARRIAGE #COUPLE #LOVE