"தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள்"... "மளமளவென சரிந்து விழுந்த"... "நள்ளிரவில் நடந்த பரிதாபம்!"... "கதறிய உறவினர்கள்!"...
முகப்பு > செய்திகள் > தமிழகம்வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 சிறுவர்கள் இடிபாடுகளுக்குள் உயிரோடு புதைந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பொதுவக்குடி கிராமத்தை சேர்ந்தவர், ரேகா. அவருக்கு இரு மகன்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு, ரேகா தனது குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, நள்ளிரவில் திடீரென்று வீட்டின் மேற்கூரை இடிந்து மொத்தமாக வந்து விழுந்தது.
இதைத் தொடர்ந்து, சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மூவரையும் மீட்க முயன்றனர்.
ஆனால், தீயணைப்புத்துறை வீரர்களின் துணையுடன், நீண்ட போராட்டத்திற்குப் பின்பு 2 குழந்தைகளையும் பிணமாக மட்டுமே மீட்க முடிந்தது. மேலும், அவர்களுடைய தாயார் ரேகா, பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். அவர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
பலியான சிறுவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இதற்கிடையே, அந்த வீட்டின் கூரை மிகவும் பழுதடைந்து இருந்ததால் இடிந்து விழுந்து இருக்கலாம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசின் நிவாரண நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
