‘அடுத்தடுத்து’ நடந்த சோகம்... தொடர்ந்து ‘கட்டாயப்படுத்திய’ பெற்றோர்... ‘சென்னையில்’ பெண் எடுத்த ‘விபரீத’ முடிவு...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jan 31, 2020 07:17 PM

சென்னையில் பெற்றோர் இரண்டாவது திருமணத்திற்கு வற்புறுத்தியதால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Chennai Woman Commits Suicide Over Marriage Issue

புதுச்சேரியைச் சேர்ந்த அங்கயற்கண்ணி என்பவருக்கு கடந்த 2012ஆம் ஆண்டு திருமணமாகியுள்ளது. இவருக்கு குழந்தை ஒன்று இருந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2014ஆம் ஆண்டு கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றுள்ளார். அதன்பிறகு உடல்நலக்குறைவால் குழந்தையும் இறந்துவிட, அங்கயற்கண்ணி மனமுடைந்து போய் இருந்துள்ளார்.

இதையடுத்து வடபழனியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அவருக்கு வேலை கிடைக்க, அவர் சென்னையில் விடுதியில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அங்கயற்கண்ணியின் பெற்றோர் அவரை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி வந்ததாகவும், அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து கடந்த 28ஆம் தேதி அவர் சர்க்கரை நோய்க்காக வாங்கி வைத்திருந்த 90 மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கிக் கிடந்த அவரைப் பார்த்து அதிர்ந்துபோன தோழிகள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.

Tags : #SUICIDEATTEMPT #CHENNAI #MARRIAGE #BABY