‘சகோதர் உணவில் விஷம்’.. வீட்டுக்குள் தூக்கில் தொங்கிய கணவன், மனைவி.. சென்னையில் நடந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Feb 01, 2020 09:57 PM

சென்னையில் கணவன், மனைவி உள்ளிட்ட 3 மூன்று பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chennai husband and wife commits suicide for loan

சென்னை வியாசர்பாடி அடுத்த எருக்கஞ்சேரியை சேர்ந்தவர் கரிகாலன். இவரது மனைவி முனியம்மாள். இவர்கள் தங்களது மகளின் திருமணத்துக்காக பெற்ற கடனை அடைக்க கடந்த மாதம் வீட்டை விற்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களது மகன் ஆத்திரத்தில் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. தங்களது சொந்த வீட்டை காலி செய்து வாடகை வீட்டிற்கு செல்ல இன்னும் 4 நாட்கள் இருந்துள்ளன.

இந்த நிலையில் கணவன், மனைவி இருவரும் வீட்டுக்குள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் முனியம்மாளின் சகோதரர் ஆறுமுகம் என்பரும் சடலமாக கிடந்துள்ளார். அவர் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்து இருந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மூன்று சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Tags : #SUICIDEATTEMPT #CHENNAI #HUSBANDANDWIFE #LOAN