'மயங்க் உள்ளே'... 'ரோகித் வெளியே'... 'மற்றுமொரு இளம்வீரருடன்'... 'நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் களமிறங்கும் இந்திய வீரர்கள் யார்?'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
![indian team for test series against nz has been announced indian team for test series against nz has been announced](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/indian-team-for-test-series-against-nz-has-been-announced.jpg)
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை முழுமையாக வென்று வரலாற்று சாதனை படைத்தது.
இதன் தொடர்ச்சியாக, நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரிலும், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இந்நிலையில், காயம் காராணமாக ரோகித் சர்மா டெஸ்ட் தொடரில் இருந்து விலக்கப்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், இளம் வீரரான பிரித்வி ஷாவும் அணியில் இடம் பெற்றுள்ளார்.
டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில், விராட் கோலி (கேப்டன்), மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, சுப்மான் கில், புஜாரா, ரகானே, ஹனுமா விஹாரி, ரிதிமான் சகா, ரிஷப் பந்த், அஷ்வின், ஜடேஜா, பும்ரா, உமேஷ் யாதவ், முகம்மது சமி, நவ்தீப் சைனி ஆகியோர் இடம் பெற்றிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)