'துக்க நிகழ்ச்சிக்கு சென்ற மகனுக்கு'... 'பிறந்த நாளில் நடந்த பயங்கரம்'... 'துன்பத்திலும் பெற்றோர் செய்த காரியம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 23, 2020 06:53 PM

போரூர் அருகே பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், கல்லூரி மாணவர் உயிரிழந்த நேரத்திலும், அவரது பெற்றோர் செய்த காரியம் நெகிழ வைத்துள்ளது.

Son Died in Accident, Parents Donated his Eyes in Chennai

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன். இவரது மகன் ‌ஷரவணன் (18). காட்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 16-ந் தேதி, சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஷரவணன் ஊரிலிருந்து வந்துள்ளார். உறவினர்கள் வீட்டில் இருந்த ஷரவணன் கடந்த 17-ந் தேதி இரவு பெட்ரோல் வாங்குவதற்காக, உறவினர் தர்‌ஷன்குமார் என்பவரை அழைத்து கொண்டு ‌இருசக்கர வாகனத்தில் கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

காளியம்மன் கோவில் தெரு கோயம்பேடு மார்கெட் ‘ஏ’ ரோடு சந்திப்பு அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக அரசுப் பேருந்து மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ‌ஷரவணனின் தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். ‌கூட வந்தவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஷரவணன், சிகிச்சை பலனின்றி ‌ஷரவணன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். ‌

தங்களது மகனை பறிகொடுத்த வேதனையில் இருந்த ஷரவணனின் பெற்றோர், யாருக்கேனும் உதவும் வகையில், ஷரவணின் கண்களை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர். விபத்து நடந்த 17-ந் தேதி ‌ஷரவணனின் 18-வது பிறந்த நாள் ஆகும். பிறந்த நாள் அன்றுஅவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பலியான ‌ஷரவணன் பிரபல சினிமா சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினத்துக்கு பேரன் முறை உறவினர் எனக் கூறப்படுகிறது.